ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வருவாயில் வீழ்ச்சி

ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.;

Update: 2018-09-01 22:15 GMT
புதுடெல்லி, 

கடந்த ஜூன் மாதம் ரூ.95 ஆயிரத்து 610 கோடியாகவும், ஜூலை மாதம் ரூ.96 ஆயிரத்து 483 கோடியாகவும் ஜி.எஸ்.டி. வருவாய் இருந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.93 ஆயிரத்து 960 கோடியாக குறைந்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டதுதான், வருவாய் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்