நில முறைகேடு புகார்: சோனியா மருமகன் மீது வழக்கு பதிவு

அரியானா மாநிலத்தில் நில முறைகேடு புகாரில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-09-01 22:30 GMT
சண்டிகார், 

அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள குர்கானில் நடந்த நில முறைகேடு தொடர்பாக, அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி புபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுரிந்தர் சர்மா என்பவர் அளித்த புகாரின் பேரில், குர்கான் நகரில் உள்ள கேர்கி தவுலா போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அரியானா மாநிலத்தில், புபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ராபர்ட் வதேராவின் நிறுவனங்கள் பெருமளவில் ஆதாயம் அடைந்ததாக ஏற்கனவே சர்ச்சை நிலவி வந்தது.

மேலும் செய்திகள்