நாகலாந்தில் வெள்ளத்தால் பெரும் சேதம்: மத்திய அரசு 219 கோடி நியுதவி அளிக்க முதல்-மந்திரி ரியோ கோரிக்கை

நாகலாந்தில் வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது மத்திய அரசு 219 கோடி நியுதவி அளிக்க முதல்-மந்திரி ரியோ கோரிக்கைவிடுத்துள்ளார்.

Update: 2018-09-01 08:38 GMT
நாகலாந்து,

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர், 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது. 

400 கிராமங்களில் வசித்து வந்த 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.  நாகாலாந்து மாநிலத்திற்கு மத்திய அரசு உடடியான வெள்ள நிவாரண நிதியாக 219 கோடி நியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்-மந்திரி நெப்யூ ரியோ உத்தரவிட்டுள்ளார். 

கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து, நாகாலாந்து முதல்-மந்திரி நெப்யூ ரியோவிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.

மேலும் செய்திகள்