டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. #PmModi

Update: 2018-02-08 01:57 GMT
புதுடெல்லி, 


பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு தகவல்களை டுவிட்டர் வலைத்தளத்தில் அளித்து வருகிறார். பாராட்டு, இரங்கல், அறிவுரை உள்ளிட்டவை இதில் அடங்கும். இதனால் அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அரசியல்வாதிகளில் யாருக்குமே இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் ஆதரவு இருந்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அவரை டுவிட்டரில் 4 கோடியே 48 ஆயிரத்து 316 பேர் பின்தொடருகின்றனர் என தெரியவந்து உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை 57 லட்சத்து 67 ஆயிரத்து 118 பேர் மட்டுமே பின் தொடர்பவர்களாக இருக்கின்றனர்.

சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பை பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 16 ஆக உள்ளது. அதே சமயம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வெறும் 8 லட்சத்து 48 ஆயிரம் பேர் மட்டும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்