போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது
டெல்லி விமான நிலையத்தில் மகளை பார்ப்பதற்காக போலியான டிக்கெட்டுகளுடன் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனைய கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளனர்.
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிடித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காபூல் நகருக்கு சென்ற தங்களது மகளை பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலைய முனையத்திற்குள் அவர்கள் சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த தம்பதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து விதிகளின்கீழ் முறையான டிக்கெட் இன்றி விமான நிலைய முனையத்திற்குள் நுழைவது என்பது சட்ட விரோத செயல் ஆகும்.