இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்க்கை தேர்வு செய்துள்ளது.

Update: 2017-08-12 04:18 GMT
பல்கலே,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் முறையே இந்திய அணி 304 ரன்கள், இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசங்களில் இமாலய வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி மாவட்டம் பல்லகெலேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இலங்கையை முழுமையாக தோற்கடித்து ‘ஒயிட்வாஷ்’ ஆக்க வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இலங்கை அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா, 

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரகானே, அஷ்வின், சகா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ்,முகம்மது சமி, உமேஷ் யாதவ்,

இலங்கை, 

உபுல் தரங்கா, திமுத் கருணரத்னே, குசல் மென்டிஸ், தினேஷ் சண்டிமால், ஏஞ்சலே மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, டில்ருவன் பெரேரா, மலிண்டா புஷ்பகுமரா, லக்‌ஷன் சண்டகன்,விஷ்வ பெர்னோண்டா, லகிரு குமாரா,

மேலும் செய்திகள்