ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை வருத்தபட வில்லை நான் ஒரு போராளி மீரா குமார் பேட்டி

நான் ஒரு போராளி நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என ஜனாதிபதி காங்கிரஸ் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் கூறியுள்ளார்.

Update: 2017-07-20 10:10 GMT
புதுடெல்லி,

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர். 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும்.

இந்த நிலையில்  மீரா குமாரை விட பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 2,74,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இது குறித்து   மீரா குமாரிடம் செய்தியார்களிடம் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நாம் சந்திப்போம். ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார்.  அதற்கான நான் வருத்தபடவில்லை.  நான் ஏன் வருத்தப்பட வேண்டும்.  நான் ஒரு போராளி, என் நாட்டின் மக்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கைக்காக போராடி வருகிறேன்.

மேலும் செய்திகள்