கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் இன்று ஜாமீன் மனு தாக்கல்

நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-07-16 23:19 GMT

கொச்சி,

நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 3 நாள் போலீஸ் காவலுக்கு பிறகு, அவரை 25–ந் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது ஜாமீன் மனுவையும் அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, நடிகர் திலீப் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்கிறார். இத்தகவலை அவருடைய வக்கீல் ராம்குமார் தெரிவித்தார். அதே சமயத்தில், அவரது மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அரசுத்தரப்பு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்