காஷ்மீர் விவகாரத்தில் சீனா அத்துமீறி தலையிட்டு வருகிறது-மெகபூபா முப்தி

காஷ்மீர் விவகாரத்தில் சீனா அத்துமீறி தலையிட்டு வருவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியுள்ளார்.;

Update: 2017-07-15 14:01 GMT
புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி சந்தித்து பேசினார். ஆலோசனையின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங்கிடம் மெகபூபா முப்தி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெகபூபா முப்தி செய்தியார்களிடம் கூறியதாவது:

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் உள்ள சூழ்நிலையை கெடுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனா அத்துமீறி தலையீட்டு வருகிறது. காஷ்மீரில் நெருக்கடியான தருணத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் மத ரீதியாக அமைதி நிலவி வருகிறது.  அரசியல் கட்சிகள் அனைத்தும், நாடு முழுவதும் ஒற்றுமை பெறாதவரை, காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது. இந்த தருணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பது மகிழ்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்