உத்தரபிரதேச சட்டசபையில் சக்தி வாய்ந்த வெடிமருந்து கண்டு பிடிப்பு

உத்தரபிரதேச சட்டசபையில் சோதனையின் போது போலீசார் சக்தி வாய்ந்த வெடிமருந்து இருப்பதை கண்டு பிடித்தனர்.

Update: 2017-07-14 05:32 GMT

லக்னோ

உத்தரபிரதேச மாநிலத்தில்  முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  உத்தரபிரதேச மாநில  சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற  உள்ளது. இந்த நிலையில்  உத்தரபிரதேச  சட்டசபை கட்டிட வளாகத்தை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மோப்பநாய் ஒன்று   எதிர்கட்சி தலைவர் அமரும் இருக்கைக்கு  அருகில் நீண்ட நேரம் குரைத்து கொண்டு இருந்தது. உடனடியாக போலீசார் அந்த பகுதியை சோதனையிட்டனர்.  

சோதனையில் அந்த இடத்தில்  டிஇடிஎன்  எனறு கூறக் கூடிய மிக சக்தி வாய்ந்த வெடிமருத்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வெடிமருந்தை அங்கிருந்து அகற்றினர். இந்த வெடிமருந்தை பலத்த பாதுகாப்பையும் மீறி அங்கு கொண்டு வைத்தது யார். என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது. யாரால் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்