எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2017-07-12 13:28 GMT

ஸ்ரீநகர்,


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்யவும் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்கிறது. அவ்வாறு வரும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடி வருகிறது. 

இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் வெளியாகவில்லை.

 பத்கமில் நேற்று இரவு விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டையில், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்