தீவிரவாத தாக்குதல் எதிரொலி; ஸ்ரீநகரின் பஹல்காம் பகுதியில் கடைகள் முழு அடைப்பு
அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் தங்களது எதிர்ப்பினை காட்டும் வகையில் பஹல்காம் பகுதியில் கடைகள் மூடப்பட்டன.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்காக சென்று விட்டு திரும்பிய பக்தர்களின் பேருந்து மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹுரியத் மாநாட்டு கட்சி மற்றும் இடது சாரி உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் காஷ்மீர் மக்களின் நண்பர்கள் இல்லை என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில், பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளும் நுன்வான் அடிவார முகாமுக்கு அருகிலுள்ள பஹல்காம் பகுதியில் இன்று சந்தைகள் மூடப்பட்டன. எனினும், அந்த வழியேயான அமர்நாத் பக்தர்கள் யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது.
அமர்நாத் பக்தர்கள் மீது நேற்று முன்தினம் நடந்த தாக்குதலை அடுத்து பஹல்காம் சுற்றுலா பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் இன்று அடைக்கப்பட்டன என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.