தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை- தேர்தல் ஆணையம்

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Update: 2017-07-12 09:00 GMT
புதுடெல்லி,

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல். ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று  சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக் கலாம். ஆனால் நிரந்தர தடை தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது.

சமீபத்தில்  தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்-மந்திரி லல்லுபிரசாத் யாதவ், அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா ஆகியோர் தேர்தலில் நிற்க 6 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிட தக்கது.

மேலும் செய்திகள்