ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இன்று மாலை 3.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாக வில்லை.