பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை மத்திய மந்திரி எச்சரிக்கை
ஜிஸ்டிக்கு பிறகு பொருட்கள் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
புதுடெல்லி,
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் செய்தியார்களிடம் கூறுகையில்,
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு விற்கபடாத பொருட்களின் மீது புதிய எம்.ஆர்.பி. விலையை ஒட்ட வேண்டும் என்று அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவற்றை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறை கண்டுபிடிக்கபட்டால் ரூ.25,000, 2 முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50,000 எனவும் 3-ம் முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 1 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.
விற்கப்படாமல் இருக்கும் சரக்குகளை தயாரிப்பாளர்கள் வரும் செப்டம்பர் வரை புதிய எம்.ஆர்.பி விலையில் விற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி குறித்து குறைகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவை கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறித்து விவரம் அறிய தொலைபேசி எண்கள் 14-ல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ஆராய சிறந்து வல்லுநர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.