மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின்

மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-07-07 13:21 GMT
சென்னை,

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து, ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கை கைவிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய பாஜக அரசு மதிக்க வேண்டும்.  

புதுச்சேரி, மேற்கு வங்காளம், டெல்லியில் ராஜ்பவனை வைத்து தனி அரசு நடத்துவதை கைவிட வேண்டும்.  ஆளுநர் நியமனங்களில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும். முதல்வராக இருந்த போது உரிமை வேண்டும் என்றவர் பிரதமரான பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை ஆளுநர் தொலைபேசியில் மிரட்டியது மன்னிக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்