சபரிமலை கோவில் உண்டியலில் கிடந்த பாகிஸ்தான் நாட்டு பணம்

சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு பணம் கிடந்தது.

Update: 2017-07-06 23:25 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு பணம் கிடந்தது. அதனை ‘காகித ராக்கெட்’ போன்று மடித்து உண்டியலில் போட்டுச் சென்றது யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டு பணம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 28-ந் தேதி முதல் ஆறாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை எண்ணும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது அதில் பாகிஸ்தான் நாட்டின் 20 ரூபாய் நோட்டு இருந்தது தெரியவந்தது அதனை ‘காகித ராக்கெட்’ வடிவில் மடித்து, யாரோ உண்டியலில் போட்டுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பரபரப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு உலகம் எங்கும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் நாட்டு பணநோட்டுகளை காணிக்கையாக உண்டியலில் போட்டுச் செல்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் நாட்டு பணம் ‘காகித ராக்கெட்’ போன்று உண்டியலில் கிடைக்கப்பெற்றது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதனை போட்டுச் சென்றது யார்? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். 

மேலும் செய்திகள்