காஷ்மீரில் ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர் ஆயுதத்துடன் மாயம், பாதுகாப்பு படை உஷார்
காஷ்மீரில் ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் மாயமான விவகாரம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள முகாமில் இருந்து காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அகமத் தோகேர் நேற்று இரவு மாயமானார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.கே. 47 துப்பாக்கியுடன் அவர் மாயமானது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே மாயமான ராணுவ வீரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர். போலீஸ் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது.
பிராந்தியத்தின் 173 பாட்டாலியன் படை பிரிவின் என்ஜினியரிங் பிரிவை சேர்ந்தவர் என போலீஸ் தெரிவித்து உள்ளது.