மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வயலில் தரை இறங்கியது மத்திய மந்திரி உயிர் தப்பினார்

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வயலில் தரை இறங்கியது. மத்திய மந்திரி உயிர் தப்பினார்.

Update: 2017-07-04 22:45 GMT
இடாநகர்,

மத்திய உள்துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் கிரண் ரிஜிஜு. இவர் அருணாசல பிரதேச மாநிலம் ஜிரோ என்ற இடத்தில் நடந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அசாமில் உள்ள கவுகாத்தியில் இருந்து நேற்று பிற்பகல் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் 7 பயணிகளும், விமானிகளும் இருந்தனர்.

அப்போது கனமழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டவாறு பறந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து விமானிகள் ஹெலிகாப்டரை அருணாசலபிரதேச மாநிலம் இடாநகரில் உள்ள வயல்வெளி பகுதியில் தரை இறக்கினர். மத்திய மந்திரி உயிர் தப்பினார்.

இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக வயலில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. எல்லை பாதுகாப்பு படை விமானிகள் திறமைசாலிகள். அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்