சலாஹூதின் பயங்கரவாதி என்பதை அவரது கூற்றுக்களே நிரூபித்து காட்டுகின்றன: உள்துறை அமைச்சகம்

சலாஹூதின் பயங்கரவாதி என்பதை அவரது கூற்றுக்களே காட்டுகின்றன என்று உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2017-07-03 13:29 GMT
புதுடெல்லி,

சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள சையத் சலாஹுதின் காஷ்மீரி பயங்கரவாத  அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைமை தளபதி ஆவார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரமாக உலா வரும் சலாஹுதினுக்கு 13 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலாஹுதின் பேசுகையில்,"காஷ்மீரில் இந்திய படைகளை எந்த நேரமும், எந்த இடத்திலும் தாக்கும் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் உள்ளனர். நாங்கள் இந்தியப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக எங்களது தாக்குதலை தொடங்கியுள்ளோம். நாங்கள் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம். ஆனால் பொது மக்கள் மற்றும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த மாட்டோம்” என்று தெரிவித்து இருந்தார். 

சலாஹூதினின் மேற்கண்ட பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அசோக் பிரசாத், “ சலாஹூதின்  சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு முழு தகுதியுடையவர் என்பதை சலாஹூதினின் கூற்றுக்கள் மெய்பித்துக்காட்டியுள்ளது.  சலாஹூதினின் பேசுக்கள் கடும் கண்டனத்திற்குரியவை ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்