காஷ்மீரில் ஜி.எஸ்.டி. வரிக்கு ஆதரவாக வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மாநில ஜி.எஸ்.டி. மசோதா காஷ்மீர் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படாததால், அந்த மாநிலத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவில்லை.

Update: 2017-07-01 23:15 GMT

ஜம்மு,

மாநில ஜி.எஸ்.டி. மசோதா காஷ்மீர் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படாததால், அந்த மாநிலத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தக்கோரி ஜம்மு நகரில் நேற்று நேரு மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக காரில் வந்த சட்டசபை சபாநாயகர் கவிந்தர் குப்தாவை அவர்கள் முற்றுகையிட்டு குரல் எழுப்பினார்கள்.

இதுபற்றி சபாநாயகர் கவிந்தர் குப்தா பின்னர் கூறுகையில், மாநில ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற காஷ்மீர் அரசு தீர்மானித்து இருப்பதாகவும், வருகிற 4–ந்தேதி முதல் நடைபெறும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் மாநில ஜி.எஸ்.டி. பற்றி விவாதிக்கப்படும் என்றும், அதன்பிறகுதான் மசோதாவை நிறைவேற்றுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்