செல்லாத நோட்டுக்கள் ரூ 1 கோடியுடன் ஆறு பேர் கைது

செல்லாததாக அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு நோட்டுக்களான ரூ 500, ரூ 1000 தாள்களை ரூ. 1 கோடி மதிப்பிற்கு வைத்திருந்த ஆறு பேரை தானே காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2017-07-01 11:21 GMT
தானே (மராட்டியம்) 

தானே நகரின் ஐந்தாம் மண்டலத்தின் துணை ஆணையர் சுனில் லோகாந்தே செய்தியாளர்களிடம் கூறுகையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் ஆறு பேரை கைது செய்தனர். ஒரு ஜீப் வாகனத்தை சோதித்தப்போது ரூ. 1000 நோட்டுக்கள், 9,985 தும், ரூ. 500 நோட்டுக்கள் 30 தும் கைப்பற்றப்பட்டன. மூன்று பேர் பைகளில் அந்த நோட்டுக்களை அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணையில் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு கைது செய்யப்பட்டவர்கள் நழுவலாக பதில் சொன்னார்கள். யாரிடமிருந்து யாருக்கு இப்பணத்தை புதிய நோட்டுக்களாக மாற்ற எடுத்துச் செல்கின்றனர் என்பதை குறித்து காவல்துறையினர் விசாரித்தனர். 

கைது செய்யப்பட்ட அனைவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குற்றவியல் சட்டப்பிரிவு 41(1) (டி) ந் படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்