கற்களை வீசி தாக்குதல்: பா.ஜ.க எம்.பிக்கு ஓராண்டு சிறை!
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 பேர் குற்றவாளிகள் என சித்ரகூட் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பளித்தார்.;
லக்னோ
உத்தரபிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசிய வழக்கில் பாரதீய ஜனதா எம்.பி. ஆர்.கே. சிங் படேலுக்கு ஓராண்டு சிறை தண்டணை வழங்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 பேர் குற்றவாளிகள் என சித்ரகூட் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பளித்தார்.படேல் மற்றும் 15 பேருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், 3 பேருக்கு 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.