ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

பெங்களூருவில் ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.;

Update: 2022-09-15 20:11 GMT

பெங்களூரு:

பெங்களூரு ஹெண்ணூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கோன்டே மைக் (வயது 32), சாமுவேல் (28) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும்ஹெண்ணூர்அருகே பிரகதி லே-அவுட்டில் வசித்து வந்ததுடன், தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு போதைப்பொருட்கள் விற்று வந்தது தெரியவந்தது.

கைதான 2 பேரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிராம் கொகைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேர் மீதும் ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்