டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை: மத்திய அரசே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் சகோதரிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்கி இருப்பதாகவும் டெல்லியின் சட்டம், ஒழுங்கை கையாள வேண்டியவர்கள் சட்டம் ஒழுங்கை சரிசெய்யாமல் ஒட்டுமொத்த டெல்லி அரசையும் ஒழிக்க சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஆம் ஆத்மி அரசின் கீழ் இருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.