கேரளாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: தமிழகத்தை சேர்ந்த இருவர் பலி

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-13 07:05 GMT

இடுக்கி,

அண்டை மாநிலமான கேரளாவிற்கு சிவகங்கையை சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். அப்போது உடும்பஞ்சோலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர்வாசிகள், உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ரஜீனா (20) மற்றும் சனா (7) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்