எர்ணாகுளம் அருகே 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - கல்லுக்கடையில் டேங்க் அமைத்து மறைத்தது கண்டுபிடிப்பு
எர்ணாகுளம் அருகே கள்ளுக்கடையில் தரையில் டேங்க் அமைத்து மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவில் உள்ள கல்லுக்கடையில் ரகசியமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கலால் அமலாக்கப்பிரிவினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் கதவுகள் இல்லாமல் சுற்றிலும் சுவர்கள் இருந்ததால், சந்தேமடைந்த அதிகாரிகள் சுவற்றை உடைத்துச் சென்று பார்த்தனர். அங்கு பழைய பொருட்களுக்கு அடியில் டேங்க் அமைத்து அதில் கள்ளச்சாராயம் நிரப்பி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அங்கு மொத்தம் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக கலால் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.