ஜம்மு காஷ்மீர்: திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட இரு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

ஆற்றை கடக்கும்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரு வீரர்கள் அடித்துச்செல்லப்பட்டனர்.;

Update: 2023-07-09 10:41 GMT

image tweeted by @Whiteknight_IA

பூஞ்ச்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுமையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஆற்றை கடக்கும்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரு வீரர்கள் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் சுபேதார் குல்தீப் சிங்கின் உடல் நேற்று இரவு ஓடையில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சிப்பாய் தெலு ராமின் உடல் இன்று மீட்கப்பட்டது. இருவரின் உயிர்த்தியாகத்திற்கு அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்