பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சிவசேனா கட்சியினர் மீது வழக்கு பதிவு

பிரதமர் மோடி மற்றும் மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-12 10:12 GMT

மும்பை,

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக சிவசேனா கட்சியினர் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குறித்து சமூக ஊடகங்களில் மார்பிங் செய்யப்பட்ட மற்றும் புண்படுத்தும் வகையில் அவதூறு பதிவுகளை பரப்பியதாக சிவசேனா கட்சியினர் இருவர் மீது மும்பையில் உள்ள சியோன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிவசேனா கட்சியின் (ஐடி)தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக குழுக்களிடையே பகையை ஏற்படுத்தியதற்காகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 1ம் தேதி, டுவிட்டரில் பிரதமருக்கு எதிரான அவதூறு கருத்துகளை அவர்கள் பதவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜய் பகாரே என்பவர் போலீசில் புகாரை பதிவு செய்துள்ளார். அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நன்மதிப்பை பொது மக்களிடையே களங்கப்படுத்துவதற்காக இதைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இவ்விவகாரம் தொடர்புடைய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்