பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானிகள் காயம்

பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்தனர்.

Update: 2024-08-11 13:56 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கு விமானங்கள் பழுது நீக்கும் பணிகளும் செய்யப்படுகின்றன.

இதனிடையே, பழுது நீக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பயிற்சி மையத்திற்கு கர்நாடகாவில் இருந்து சிறிய ரக விமானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அந்த சிறிய ரக விமானத்தில் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

புறப்பட்டு 40 நிமிடங்களில் வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால், விமானம் குணா கண்ட் பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 2 விமானிகள் லேசான காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த விமானிகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்