சமூக ஆர்வலர் கொலையில் 2 பேர் சிக்கினர்

ஜகலூரில் சமூக ஆர்வலர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-09 18:45 GMT

சிக்கமகளூரு:-

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் கவுரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ராமகிருஷ்ணா, சமூக ஆர்வலர். கடந்த சனிக்கிழமை இரவு இவர் ஜகலூரில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தியபோது, மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்தனர். இது குறித்து ராமகிருஷ்ணாவின் தந்தை பிரகாஷ், ஜகலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜகலூர் கிராம வளர்ச்சி துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நாகராஜ் என்பவர், மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை ராமகிருஷ்ணா வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த நாகராஜ், தனது கூட்டாளிகளை வைத்து ராமகிருஷ்ணாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்ட போலீசார் நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஜகலூர் போலீசார் ராமகிருஷ்ணா கொலை வழக்கு தொடர்பாக பிரசாந்த், தர்ஷன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்