லாரியை திருடிய 2 பெண்டாட்டிகாரர் கைது
குடும்ப செலவுகளுக்காக லாரியை திருடிய 2 பெண்டாட்டிகாரர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு-
பெங்களூரு கோனனகுண்டே பகுதியில் சாலை ஓரத்தில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியை மர்மநபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து லாரி டிரைவர், கோனனகுண்டே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்த நிலையில் லாரியை திருடியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் தமிழ்நாடு வேலூரை சேர்ந்த தீனதயாளன் (வயது 48) என்பது தெரிந்தது. மேலும் அவருக்கு 2 மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரையும் தனித்தனி வீடுகளில் தங்கவைத்து அவர் குடும்பம் நடத்தி வருகிறார். குடும்ப செலவுகளுக்காக அவர் லாரியை திருடியதை ஒப்புக் கொண்டார். இதேபோல் அவர் பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் லாரியை போலீசார் மீட்டனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.