சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் - மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பி வைத்துள்ளது.;

Update: 2023-07-06 09:01 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடியது. இதில் சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி தெலங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வெங்கட் நாராயண பஹாட்டி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்