அசுத்த தண்ணீரை குடித்த மேலும் 2 பெண்கள் சாவு

அசுத்த தண்ணீரை குடித்த மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-02-16 20:59 GMT

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகாவில் அனபுரா கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்போருக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீடுகளுக்கு வந்த குடிநீரை குடித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு சாவித்ரம்மா (வயது 35) என்பவர் பலியாகி இருந்தார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சாயம்மா மற்றும் நரசம்மா ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டார்கள். இதனால் அசுத்த நீரை குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், 3 பேர் பலியானதை தொடர்ந்து அனபுரா கிராமத்திற்கு, யாதகிரி மாவட்ட கிராம பஞ்சாயத்து செயல் அதிகாரி அமரேஷ் சென்று விசாரணை நடத்தினார். கிராமத்தில் உள்ள 4 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்தும் குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடிநீர் குழாய்களில்உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்