கேரளாவில் 2 அமைச்சர்கள் ராஜினாமா - புதிய அமைச்சர்கள் 29-ந்தேதி பதவியேற்பு

இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் மேற்கொண்ட முடிவின்படி 2 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.;

Update:2023-12-25 06:42 IST
கேரளாவில் 2 அமைச்சர்கள் ராஜினாமா - புதிய அமைச்சர்கள் 29-ந்தேதி பதவியேற்பு

திருவனந்தபுரம்,

கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், 5 ஆண்டுகள் அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் அமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் அமைச்சராகவும் இருப்பது என முடிவெடுத்தனர்.

இதன்படி காங்கிரஸ் எஸ் கட்சியின் அமைச்சராக அகமது தேவர்கோவில், காங்கிரஸ் பி கட்சி சார்பில் ஆண்டனி ராஜா ஆகியோர் அமைச்சர்களாகினர். இவர்கள் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கடனப்பள்ளி, காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய இருவரும் வரும் 29-ந்தேதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்