வீடு புகுந்து ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு

சிக்கமகளூரு அருகே வீடு புகுந்து ரூ.2½ லட்சம் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-12 15:26 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு தாலுகா சகனிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் மாரேகவுடா. விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்து நகை-பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த மாரேகவுடா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பாா்த்துள்ளார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2.60 லட்சம் மதிப்பிலான நகை-பணம் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்