உத்தரப்பிரதேசம்: ஆட்டோ, பைக் மீது டிரக் மோதி விபத்து - இருவர் பலி, 8 பேர் காயம்

காஜியாபாத்தில் ஆட்டோ மற்றும் பைக் மீது டிரக் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-30 10:25 GMT

காஜியாபாத்,

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நேற்று இரவு வேகமாக வந்த டிரக் ஒன்று ஆட்டோக்கள் மற்றும் பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். ஜிடி சாலையில் உள்ள ஷஹீத் ஸ்தல் மெட்ரோ நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டிரக் டிரைவர் தவறுதலாக ரிவர்ஸ் கியரைப் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பின்னால் வந்த இரண்டு ஆட்டோக்கள் மற்றும் பைக் மீது டிரக் மோதியது. டிரைவர் வாகனத்திலிருந்து குதித்து தப்பியோடினார். டிரக் மேம்பாலச் சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்