கொல்கத்தாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி - 17 பேர் காயம்

கொல்கத்தாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-04-01 22:41 GMT

கொல்கத்தா,

மத்திய கொல்கத்தாவின் மாயோ ரோடு பகுதியில் நேற்று மாலை பேருந்து கவிழ்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

மெடாபிரஸ்-ஹெவுரா வழித்தடத்தில் இயக்கப்படும் மினிபஸ் ஒன்று மாயோ சாலை-டப்ரின் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கவிழ்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்