சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமான இருக்கையில் மறைத்து கடத்திய 2¾ கிலோ தங்கம் மீட்பு

பயணியின் இருக்கையின் அடிப்பகுதியில் மறைத்து வைத்த நிலையில் சிறு சிறு மணிகளாக தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-03-14 22:11 GMT

கோப்புப்படம் 

திருவனந்தபுரம்,

அரபு நாடான சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, விமான நிலைய ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அந்த விமானத்தில் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் இருக்கையின் அடிப்பகுதியில் மறைத்து வைத்த நிலையில் சிறு சிறு மணிகளாக தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் 2 கிலோ 700 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனைக்கு பயந்து அதை கடத்தி வந்த பயணி, விமானத்திலேயே தங்கத்தை வைத்து இருக்கையின் அடியில் மறைத்து வைத்து விட்டு சென்றிருக்கலாம் எனவும், கடத்தி வந்த பயணி பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்