பயிற்சி விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்து - 2 விமானிகள் பலி

பயிற்சி விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

Update: 2023-03-18 22:33 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு நேற்று சிறிய ரக விமானத்தில் 2 விமானிகளுடன் புறப்பட்டது.

விமானம் பஹ்குடலா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த பெண் விமானி, ஆண் விமானி என 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்