சூரத்கல் சுங்கச்சாவடி போராட்ட குழு மீது 2 வழக்குகள் பதிவு

சூரத்கல் சுங்கச்சாவடி போராட்ட குழு மீது போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-10-21 19:00 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றகோரி கடந்த 18-ந்தேதி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு காங்கிரசார் உள்பட பல்வேறு அமைப்பினர் குழுவாக ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சுங்கச்சாவடியை அகற்றகோரி கோஷமிட்டனர்.

அவர்களை, போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றி சென்று மாலையில் விடுவித்தனர். இந்த நிலையில் சூரத்கல் சுங்கச்சாவடி மேலாளர் சிஷுபால் சிங், போராட்டத்தில் சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக சூரத்கல் போலீசில் புகார் அளித்தார்.

அதேபோல் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் லிங்கேகவுடா, போராட்டம் நடத்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் போலீசில் புகார் அளித்தனர். இந்த 2 புகார்களின் பேரில் சூரத்கல் போலீசார், போராட்ட குழு மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்