செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
செல்போன் திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு கோரமங்களா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் சஜத், அருண் என்பது தெரியவந்தது. இரவில் தனியாக நடந்து செல்பவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் சஜத், செல்போன்களை பறிப்பார். பின்னர் அந்த செல்போன்களை பசவேஸ்வராநகரில் செல்போன் கடை நடத்தி வரும் அருணிடம் விற்று வந்து உள்ளார்.
திருட்டு செல்போன்கள் என்று தெரிந்தும் அருண் வாங்கியுள்ளார். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 40 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. கைதான 2 பேர் மீதும் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.