கர்நாடகத்தில் புதிதாக 185 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-14 22:54 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 116 பேருக்கும், மைசூருவில் 25 பேருக்கும், குடகில் 7 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தட்சிண கன்னடாவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 133 பேர் குணம் அடைந்தனர். 2 ஆயிரத்து 950 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.82 ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்