வாடகை வீட்டிற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி- யாரெல்லாம் செலுத்த வேண்டி இருக்கும்?

ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-08-12 11:59 GMT

புதுடெல்லி,

கடந்த ஜூன் 29ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் வரி திருத்தம், புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகள் ஜூலை 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் விதிமுறையும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும். தனி நபர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகைக்கு வீடு எடுத்திருந்தால் ஜிஎஸ்டி வரி பொருந்தாது. வணிக நோக்கத்துக்காக வீடு வாடகை எடுத்திருந்தால் வரி செலுத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்