2023-ல் இந்தியாவில் 177 புலிகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்
அதிகபட்சமாக மராட்டியத்தில் 45 புலிகள் இறந்துள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் இந்த ஆண்டில் 202 புலிகள் உயிரிழந்ததாக சில ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டிருந்தன. இதையடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகம் உண்மையான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் டிசம்பர் 25 வரை இந்தியாவில் 177 புலிகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மராட்டியத்தில் 45 புலிகளும், மத்தியப் பிரதேசத்தில் 40 புலிகளும், உத்தரகாண்டில் 20 புலிகளும், தமிழ்நாட்டில் 15 புலிகளும், கேரளாவில் 14 புலிகளும் இறந்துள்ளன. இவற்றில் 54 சதவீத புலிகள் காப்பகத்திற்கு வெளியே இறந்துள்ளன.
உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில்தான் உள்ளன. குறைந்தபட்சம் இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன.