இந்தியாவில் 2021-ல் போக்குவரத்து விபத்துக்களில் 1.73 லட்சம் பேர் உயிரிழப்பு: 2-வது இடத்தில் தமிழகம்

போக்குவரத்து விபத்துக்களில் அதிகபட்ச உயிரிழப்புகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.

Update: 2022-08-29 13:54 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் நடந்த 4.22 லட்சம் போக்குவரத்து விபத்துக்களில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் போக்குவரத்து விபத்துக்களில் கடந்த ஆண்டு 24 ஆயிரத்து 711 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 685 இறப்புகள் பதிவாகியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை 2020-ல் 3 லட்சத்து 68 ஆயிரத்து 828 இல் இருந்து கடந்த ஆண்டு 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் நடந்த இந்த போக்குவரத்து விபத்துகளில் 4,03,116 சாலை விபத்துகளும், 17,993 ரெயில் விபத்துகளும், 1,550 ரயில்வே கிராசிங் விபத்துகளும் அடங்கும். 

Tags:    

மேலும் செய்திகள்