காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - ஏடிஜிபி தகவல்

காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-31 14:40 GMT

ஜம்மு,

காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர். 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆகும்.

கடந்த ஆண்டை காட்டிலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. 100 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதில், 74 பேர் லஷ்கர் அமைப்பில் இணைந்தனர். பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்