தொடர் மழை... 17 ரெயில் சேவைகளை ரத்து செய்தது வடக்கு ரெயில்வே
தொடர் மழை காரணமாக 12 ரெயில் சேவைகளை வடக்கு ரெயில்வே ரத்துசெய்துள்ளது.
டெல்லி,
வடக்கு ரயில்வே பிராந்தியத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 17 ரயில்களை ரத்து செய்ததுடன், சுமார் 12 ரயில்களை மாற்று வழியில் திருப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நான்கு இடங்களில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிரோஸ்பூர் கான்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சண்டிகர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சண்டிகரில் இருந்து அமிர்தசரஸ் சந்திப்பு எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.
மும்பை சென்ட்ரல்- அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், தௌலத்பூர் சௌக் எக்ஸ்பிரஸ் ஆகியவை மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. என கூறப்பட்டுள்ளது.