கர்நாடகத்தில் புதிதாக 1,692 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,692 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 33 ஆயிரத்து 320 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,154 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவமொக்கா, துமகூருவில் சிகிச்சை பலனின்றி தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,094 பேர் குணம் அடைந்தனர். 11 ஆயிரத்து 105 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 6 கோடியே 78 லட்சத்து ஆயிரத்து 921 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 5.07 ஆக உள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.