கர்நாடகத்தில் 1,691 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் 1,691 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது.

Update: 2022-08-11 21:17 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 27 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,691 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாரி, பெங்களூரு புறநகர், பெலகாவி, தார்வார், கொப்பல், விஜயாப்புராவில் தலா ஒருவர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதுவரை 40 லட்சத்து 26 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

40 ஆயிரத்து 134 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 1,982 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 75 ஆயிரத்து 855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 54 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்